என் மலர்
உள்ளூர் செய்திகள்

கணவர் வெளிநாடு சென்றுள்ள நிலையில் மகன்களுக்கு செல்போனில் தகவல் கொடுத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்
- ஜெயலட்சுமி தனக்கு வாழவே பிடிக்கவில்லை என்று விரக்தியாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.
- ஜெயலட்சுமி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
தருமபுரி,
தருமபுரியை அடுத்துள்ள மதிகோன்பாளையம் புதிய திருப்பத்தூர் சாலைப்பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது40).இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் வெளியூர்களில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரகாசும் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். இதனால் ஜெயலட்சுமி மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். நேற்று தனது மகன்கள் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய ஜெயலட்சுமி தனக்கு வாழவே பிடிக்கவில்லை என்று விரக்தியாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.
இதனால் அதிர்ச்சி யடைந்த மகன்கள் தருமபுரியில் வசிக்கும் தங்களது உறவினர் ஒருவருக்கு தகவல் தெரிவித்து தங்களது தாயை பார்த்துவிட்டு வரும்படி தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஜெயலட்சுமியின் உறவினர் மதிகோன்பாளையம் சென்று பார்த்தபோது வீடு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது.
இதனால் சந்தேகமடைந்து அக்கம்பக்கம் உள்ளவர்களுடன் சேர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஜெயலட்சுமி தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து தருமபுரி நகர போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து ஜெயலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஜெயலட்சுமி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.






