என் மலர்
உள்ளூர் செய்திகள்

தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு தர ஊர்வலமாக வந்த கேபிள் டி.வி.ஆபரேட்டர்கள்.
புகார் மனு கொடுக்க வந்தபோது தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் கேபிள் டி.வி.ஆபரேட்டர்கள்-போலீசார் வாக்குவாதம்
- தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
- நகர போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் ,கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்களுக்கும் நீண்ட நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.
தருமபுரி,
இலவசமாக செட்டப் பாக்ஸ்களை பொது மக்களுக்கு வழங்கி விட்டு தற்போது செயல்படாத செட்டப்பாக்ஸ்களுக்கு கிரய தொகை என்று சொல்லி பெருந்தொகையை வசூலிப்பது தொடர்பாக தமிழக கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் பொது நலச்சங்கத்தின் மாவட்ட தலைவர் சேட்டு தலைமையில் தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில துணை தலைவர் தாமோதரன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு எதிரே தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
அதனை தொடர்ந்து காவல் துறை மற்றும் வருவாய் துறையினர் கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்களை குற்றவாளிகள் போல் நடத்துவது, கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்களின் நலவாரியம் அமைப்பது தொடர்பாக மனுவை கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனுவாக கொடுக்க முற்பட்டனர். அதனை தொடர்ந்து அங்கு வந்த நகர போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் ,கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்களுக்கும் நீண்ட நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு 5 பேர் மட்டும் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் மனு கொடுக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் நவாஸ் அனுமதி வழங்கினார்.
இந்த மனு கொடுக்கும் போராட்டத்தில் மாவட்ட செயலாளர் முனுசாமி, மாவட்ட பொருளாளர் முருகன் மற்றும் 200-க்கும் மேற்பட்ட கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் கலந்து கொண்டனர்.