என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாய்க்காலில் தவறி விழுந்த தொழிலாளி கதி என்ன?
- சின்ன மருதூர் காலனியை சேர்ந்தவர் முருகன் (வயது 52), கூலித் தொழிலாளி.
- காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், ராஜா வாய்க்காலிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
பரமத்தி வேலூர்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே சின்ன மருதூர் காலனியை சேர்ந்தவர் முருகன் (வயது 52), கூலித் தொழிலாளி. இவர் நேற்று மாலை ஆனங்கூர் பகுதியில் உள்ள ராஜா வாய்க்கால் அருகில் குடிபோதையில் நின்று கொண்டிருந்தார். அப்போது வாய்க்கால் பாலத்தின் அருகே சென்ற போது தவறி ராஜா வாய்க்கால் தண்ணீரில் முருகன் விழுந்துள்ளார்.
காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், ராஜா வாய்க்காலிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. முருகன், ராஜா வாய்க்கால் தண்ணீரில் விழுந்ததை பார்த்தவர்கள் ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் கதி என்ன? என்பது தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். ராஜா வாய்க்காலில் நெடுகிலும் பல்வேறு பகுதி களில் தேடிப்பார்த்தும் அவரது உடல் கிடைக்கவில்லை.
Next Story






