என் மலர்
உள்ளூர் செய்திகள்

இல.கணேசன் (கோப்பு படம்)
சென்னை மருத்துவமனையில், மேற்கு வங்காள ஆளுநர் இல.கணேசன் அனுமதி
- ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
- இருதயத்துறை மருத்துவர் குழு சிகிச்சை அளித்து வருகிறது.
மணிப்பூர் மற்றும் மேற்கு வங்காளஆளுநர் இல.கணேசன் தமிழகம் வந்துள்ளார். இன்று காலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் அவர் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதையடுத்து சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த மருத்துவமனையை சேர்ந்த இருதய சிகிச்சை மருத்துவர் குழுவினர் இல.கணேசனுக்கு சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Next Story






