என் மலர்
உள்ளூர் செய்திகள்

கெணவுக்கரையில் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
- தூய்மை பணியாளர்களுக்கு சேலை- வேட்டி மற்றும் மளிகை தொகுப்புகள் வழங்கப்பட்டது.
- தேயிலை தோட்ட பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது.
அரவேணு,
கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கெணவுகரை ஊராட்சி கொட்டக்கம்பை, முல்லை நகர், அனந்தகிரி, பாட்டி மட்டம் பகுதிகளில் உள்ள தேயிலை தோட்ட பணியாளர்கள் மற்றும் கெணவுக்கரை ஊராட்சி மன்ற தூய்மை பணியாளர்களுக்கு கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சேலை- வேட்டி மற்றும் மளிகை தொகுப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கெணவுகரை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயப்பிரியா ஹரிஹரன் தலைமை தாங்கி தூய்மை பணியாளர்கள் மற்றும் தேயிலை தோட்ட பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன், ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கோத்தகிரி ஒன்றிய தி.மு.க. துணை செயலாளர் கணபதி, ராஜேந்திரன் மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள், தூய்மைப்பணி யாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






