என் மலர்
உள்ளூர் செய்திகள்

நீலகிரியில் 69 பயனாளிகளுக்கு ரூ.96.89 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
- புகைப்படக்கண்காட்சி மற்றும் அனைத்து துறைகளின் சார்பில் அமைக்க ப்பட்ட பணிவிளக்க கண்காட்சி தொடங்கியது
- நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அம்ரித் வழங்கினார்
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், "ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழர்களின் கனவுகளைத் தாங்கி" என்ற தலைப்பில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த சிறப்பு புகைப்படக்கண்காட்சி மற்றும் அனைத்து துறைகளின் சார்பில் அமைக்க ப்பட்ட பணிவிளக்க கண்காட்சி தொடங்கியது.
இதனை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
விழாவில் கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப் பெண் திட்டம், மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி உள்பட அனைத்து திட்டங்களும் சிறப்பான முறையில் நீலகிரியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
1 முதல் 5 -ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கான காலை உணவு திட்டம் நீலகிரியில் கூடலூர் பகுதியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் நமது மாவட்டத்தில் கடந்த 1 ஆண்டில், 1.5 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. அதே போன்று வன யானைகளை பாதுகாக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஊரக வளர்ச்சி முகமை, வேளாண் வளர்ச்சி துறை போன்ற துறைகளின் மூலமாகவும், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படு த்தப்பட்டு வருகிறது.
எனவே சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அனைவரும் இதுபோன்ற அரசு திட்டங்களை தெரிந்து பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து 69 பயனாளிகளுக்கு ரூ.96.89 லட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், மாவட்ட வன அலுவலர் கவுதம், திட்ட இயக்குநர்கள் ஜெயராமன் (ஊரக வளர்ச்சி முகமை), பாலகணேஷ் (மகளிர் திட்டம்), தோட்டகலைத்துறை இணை இயக்குநர் (பொ) ஷிபிலா மேரி, ஊட்டி நகர்மன்ற தலைவர் வாணீஸ்வரி, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் என்ற மாதன், ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர், முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சுகந்தி பரிமளம், மாவட்ட தொழில் மையம் மேலாளர் சண்முக சிவா, தாட்கோ மேலாளர் ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையாளர்கள் காந்திராஜ் (ஊட்டி), பிரான்சிஸ் ஜேவியர் (கூடலூர்), உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) இப்ராஹீம்ஷா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவக்குமாரி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் மலர்விழி, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் பிரவீணா தேவி, ஊட்டி தாசில்தார் ராஜசேகர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சையத் முகம்மத், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) சரண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






