என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளிக்கு ரூ.40 லட்சம் மதிப்பில், 400 செட் டெஸ்க்-பெஞ்சுகள் மற்றும் ஆசிரியர்களுக்கு 40 செட் மேசை, நாற்காலிகள் வழங்கப்பட்டது.
அரசு பள்ளிக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
- ரூ.40 லட்சம் மதிப்பில், 400 செட் டெஸ்க்-பெஞ்சுகள் வழங்கப்பட்டது.
- மேயர் சத்யா மேசை, நாற்காலிகளை வழங்கினார்.
ஓசூர்,
ஓசூர் ஜுஜுவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 1,600 மாணவ மாணவியர் படித்து வருகின்றனர்.இவர்களின் நலன் கருதி ஒரு தனியார் நிறுவனம் சார்பில் ரூ.40 லட்சம் மதிப்பில், 400 செட் டெஸ்க்-பெஞ்சுகள் மற்றும் ஆசிரியர்களுக்கு 40 செட் மேசை, நாற்காலிகள் வழங்கப்பட்டது.
இதையொட்டி பள்ளியில் நேற்று மாலை நடைபெற்ற விழாவிற்கு, மாநகராட்சி கல்விக்குழு தலைவர் எச். ஸ்ரீதரன் தலைமை தாங்கினார்.மாநக ராட்சி நகரமைப்புக்குழு தலைவர் அசோகா, பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் ராஜசேகர் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை நர்மதா தேவி வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா கலந்து கொண்டு, மேசை, நாற்காலி களை வழங்கி விழாவில் பேசினார்.
மேலும், துணை மேயர் ஆனந்தய்யா, தனியார் நிறுவன அதிகாரிகள் துரைராஜ் கோனி, கிரண் குமார், வட்டார கல்வி அலுவலர் கோவிந்தன், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், ஆசிரிய, ஆசிரியைர் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.






