search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 728 பேருக்கு நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
    X

    விழாவில் அமைச்சர் கீதாஜீவன் நலத்திட்ட உதவிகள் வழங்கிய காட்சி

    தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 728 பேருக்கு நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

    • எட்டயபுரம் ரோடு கலைஞர் அரங்கில் நடைபெற்ற விழாவில் தையல் எந்திரம், சைக்கிள், உதவித்தொகை, ஹாட் பாக்ஸ் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • தொழில் வளம் பெருகுவதற்கும் கல்வி வளர்ச்சியடைவதற்கும் என அனைத்து துறைகளையும் முன்னேற்ற பாதைக்கு எடுத்துச் சென்றுள்ளார்

    தூத்துக்குடி:

    தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. 45-வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் எட்டயபுரம் ரோடு கலைஞர் அரங்கில் நடைபெற்ற விழாவில் தையல் எந்திரம், சைக்கிள், உதவித்தொகை, ஹாட் பாக்ஸ் என மொத்தம் 728 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கடுமையான நிதிநெருக்கடி, மறுபுறம் ஒன்றிய அரசின் நெருக்கடி இவற்றை யெல்லாம் தாங்கி கொண்டு பொருளாதார நிலை உயர்வதற்கும் தொழில் வளம் பெருகு வதற்கும் கல்வி வளர்ச்சியடைவதற்கும் என அனைத்து துறைகளையும் முன்னேற்ற பாதைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

    தமிழர்களின் வாழ்வாதாரமும், கலாசாரமும் பாதுகாக்கப்பட்டு உலகம் முழுவதும் தமிழர்களின் பெருமையை எடுத்துச் சொல்லும் வகையில் பணியாற்றும் முதல்-அமைச்சர் தமிழகத்தில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறார். முதல்-அமைச்சரின் கரத்தை வலுப்படுத்த அனைவரும் துணை நிற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணைச்செயலளார் புளோரன்ஸ், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகம், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன்,

    மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரி தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×