search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    262 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
    X

     பெரியாம்பட்டி உள்வட்டம், பேகாரஅள்ளி தரப்பு சுண்ணாம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்.

    262 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

    • ரூ.2.71 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.
    • கண்காட்சி அரங்குகளை மாவட்ட கலெக்டர் சாந்தி பார்வையிட்டார்.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், பெரியாம்பட்டி உள்வட்டம், பேகாரஅள்ளி தரப்பு சுண்ணாம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் மாவட்ட கலெக்டர் சாந்தி 262 பயனாளிகளுக்கு ரூ.2.71 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.

    முகாமில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 190 பயனாளிகளுக்கு ரூ.240.31 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப்பட்டாகளும், முதியோர் உதவித்தொகைகளும், ஆதரவற்ற விதவை உதவித்தொகைகளும், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகைகளும், தற்காலிக இயலாமைக்கான உதவித்தொகைகளும் வழங்கப்பட்டுள்ளது.

    இயற்கை மரணம் உதவித்தொகைகளும், நலிந்தோர் குடும்ப நல உதவித்தொகைகளும், திருமண உதவித்தொகைகளும், பட்டா மாற்றம், வாரிசு சான்று, விதவை சான்றிதழ் மற்றும் மின்னனு குடும்ப அட்டை களும்,தோட்டக்கலைத் துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.2.20 லட்சம் மதிப்பீட்டில் வீரிய ஒட்டு நாற்றுகளும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.2.12 லட்சம் மதிப்பீட்டில் உணவு மற்றும் ஊட்டச்சத்து இயக்கங்களும் வழங்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.1.2 லட்சம் மதிப்பீட்டில் கடன் உதவிகளும், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் விபத்து மரணம் உதவித்தொகைகளும் என மொத்தம் 262 பயனாளிகளுக்கு ரூ.2,71,40,548- (ரூ.2.71 கோடி) மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்.

    முன்னதாக, இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட கலெக்டர் சாந்தி பார்வையிட்டார்.

    இதில் தருமபுரி வருவாய் கோட்ட அலுவலர் கீதாராணி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், காரிமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவர் சாந்தி பெரியண்ணன், ஒன்றியக் குழு உறுப்பினர் மாது, பேகாரஅள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் நந்தினி ஈஸ்வரன், பேகாரஅள்ளி ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் இந்திராணி உட்பட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×