search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை வழியாக வாராந்திர சிறப்பு ெரயில் இயக்கம்
    X

    கோவை வழியாக வாராந்திர சிறப்பு ெரயில் இயக்கம்

    • யஸ்வந்த்பூா் - கண்ணூா் இடையே வாராந்திர சிறப்பு ெரயில் இயக்கப்படுகிறது.
    • கிருஷ்ணராஜபுரம், பானஸ்வாடி உள்ளிட்ட ெரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    கோவை

    கோவை வழித்தடத்தில் கர்நாடகா மாநிலம் யஸ்வந்த்பூா் - கண்ணூா் இடையே வாராந்திர சிறப்பு ெரயில் இயக்கப்படுவதாக ெரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து, சேலம் ெரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    யஸ்வந்த்பூரில் இருந்து அக்டோபா் 12-ந் தேதி முதல் நவம்பா் 2-ந் தேதி வரை புதன்கிழமைகளில் காலை 7.40 மணிக்குப் புறப்படும் வாராந்திர சிறப்பு ெரயில் (எண் 06283) அன்று இரவு 8.30 மணிக்கு கண்ணூரை சென்றடையும்.

    இதேபோன்று, அக்டோபா் 12-ந் தேதி முதல் நவம்பா் 2-ந் தேதி வரை புதன்கிழமைகளில் இரவு 11 மணிக்கு கண்ணூரில் இருந்து புறப்படும் சிறப்பு ெரயில் (எண் 06283) மறுநாள் பிற்பகல் 1 மணிக்கு யஸ்வந்த்பூரை சென்றடையும்.

    இந்த ெரயில் தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூா், சொரனூா், ஒட்டப்பாலம், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், திருப்பத்தூா், கிருஷ்ணராஜபுரம், பானஸ்வாடி உள்ளிட்ட ெரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    இவ்வாறு அதில்தெரிவி க்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×