search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும் - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
    X

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடந்தது.

    உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும் - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

    • ரெட்டவயல் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் 27 விவசாயிகளுக்கு தள்ளுபடியான கடன் தொகை கிடைக்காமல் மோசடி செய்யப்பட்டுள்ளது.
    • கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு 1 மாதம் கடந்தும் இதுவரை உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் தண்ணீர் திறப்பதற்கான எந்த ஆயத்த பணியும் நடைபெறவில்லை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன் தலை மையில் விவசாயிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-

    பேராவூணி வட்டம், ரெட்டவயல் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் 27 விவசாயிகளுக்கு தள்ளுபடியான கடன் தொகை கிடைக்காமல் மோசடி செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக விவசாயிகள் புகார் செய்ததையடுத்து நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டது. எனவே மீண்டும் கைப்பற்றப்பட்ட தொகையை சம்மந்தப்பட்ட விவசாயிகளுக்கு கிடை த்திட நடவடிக்கைஎடுக்க வேண்டும்.கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்ப ட்டு 1 மாதம் கடந்தும் இதுவரை உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலிலும், புதிய கட்டளை மேட்டு வாய்க்காலிலும்தண்ணீர் திறப்பதற்கான எந்த ஆயத்த பணியும் இதுவரை நடைபெறவில்லை.இது விவசாயிகளை கவலை யடையச் செய்துள்ளது. எனவே உடன் தூர்வாரி

    பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.

    Next Story
    ×