search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நம்ம ஊரு சூப்பரு திட்டத்தில்   தண்ணீர், சுகாதாரம், கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி:மாவட்ட கலெக்டர் தகவல்
    X

    நம்ம ஊரு சூப்பரு திட்டத்தில் தண்ணீர், சுகாதாரம், கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி:மாவட்ட கலெக்டர் தகவல்

    • பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறப்பு முகாம்கள் ஜீலை மாதம் 15- ந் தேதி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பகுதிகளிலும் நடைபெறவுள்ளது.
    • மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்துடன் இணைந்து சுத்தமான மற்றும் பசுமையான கிராமங்களை ஊக்குவிக்கபடவுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நம்ம ஊரு சூப்பரு என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலமாக கிராமங்களில் தண்ணீர், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறப்பு முகாம்கள் ஜீலை மாதம் 15- ந் தேதி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பகுதிகளிலும் நடைபெறவுள்ளது. மேலும் இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, கடந்த மே1-ந் தேதி சிறுபாக்கம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தூய்மை உறுதி மொழி எடுத்து கொண்டவாறு வருகின்ற 13-ந் தேதி வரை பொது நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் தூய்மைக்காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் நேரு யுவ கேந்திரா அமைப்பு ஆகியோரை ஈடுபடுத்தி பெருமளவில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளபடவுள்ளது. வருகின்ற 8-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், பள்ளிகள், பொது நிறுவனங்களில் சுகாதார மற்றும் நல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்துடன் இணைந்து சுத்தமான மற்றும் பசுமையான கிராமங்களை ஊக்குவிக்கபடவுள்ளது.

    மேலும் 15-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை தண்ணீர் சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஊரக பகுதிகளில் சுய உதவி குழு உறுப்பினர்களைக் கொண்டு விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடத்தப்பட்டவுள்ளது. 29 - ந் தேதிமுதல் ஜீன் மாதம் 3- ந் தேதி வரை ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்து, அவற்றிற்கான மாற்றுப் பொருட்களை பயன்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இதேபோல் ஜீன் மாதம் 5- ந் தேதி முதல் 15- ந் தேதி வரை தண்ணீர், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை குறித்து பள்ளிகள் மற்றும் மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படும் என செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×