search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மாநகராட்சி சார்பில் நீர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி:கலெக்டர்- மேயர் பங்கேற்பு
    X

    கடலூரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    கடலூர் மாநகராட்சி சார்பில் நீர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி:கலெக்டர்- மேயர் பங்கேற்பு

    • மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • மரம் நடுவோம் மழை நீர் பெறுவோம், மழை நீர் உயிர் நீர், நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும்

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி சார்பில் நீர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஜவான் பவன் சாலையில் நடைபெற்றது. பேரணியை கலெக்டர் அருண் தம்புராஜ் , மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர். கூடுதல் கலெக்டர் மதுபாலன் , வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இப்பேரணியில் நீர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து பதாகைகள் ஏந்தி பேரணி கடலூர் அண்ணா மேம்பாலம், பாரதி சாலை வழியாக கடலூர் டவுன் ஹாலில் வந்து முடிவடைந்தது. கலெக்டர் அருண் தம்புராஜ், மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் அதிகாரிகள் ஊர்வலத்தில் நடந்து வந்தனர். மேலும் பேரணி முழுவதும் தண்ணீர் அவசியத்தை குறித்தும், மரம் நடுவோம் மழை நீர் பெறுவோம், மழை நீர் உயிர் நீர், நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என விழிப்புணர்வு வாசகங்களை ஒலிபெருக்கி மூலம் வாகனங்களில் தெரிவித்து வந்தனர். அப்போது நகர் நல அலுவலர் (பொறுப்பு)ஜாபர் உசேன், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மண்டல குழு தலைவர்கள் இளையராஜா, சங்கீதா, மாநகராட்சி கவுன்சிலர்கள் சாய்துன்னிஷா சலீம், ஹேமலதா சுந்தரமூர்த்தி, பார்வதி, விஜயலட்சுமி செந்தில், சுபாஷினி ராஜா, சரஸ்வதி வேலுசாமி, ஆராமுது, சரிதா, செந்தில் குமாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×