என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா
  X

  பொதுமக்களுக்கு தர்பூசணி பழங்களை முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி வழங்கிய காட்சி.

  சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சங்கரன்கோவில் தெற்கு ரத வீதியில் அ.தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்ட நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
  • முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி நீர், மோர் பந்தலை திறந்து வைத்தார்.

  சங்கரன்கோவில்:

  சங்கரன்கோவில் தெற்கு ரத வீதியில் அ.தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்ட நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு சங்கரன்கோவில் நகர செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஒன்றிய செய லாளர்கள் ரமேஷ், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க. மகளிர் அணி மாநில துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நீர், மோர் பந்தலை திறந்து வைத்தார்.

  இதில் தலைமை கழக பேச்சாளர்கள் கணபதி, ராம சுப்பிரமணியன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அந்தோணி டேனியல், நகர்மன்ற உறுப்பினர் எஸ்.டி.சங்கரசுப்பிரமணியன், நகர அவைத் தலைவர் வேலுச்சாமி, பொருளாளர் அய்யப்பன், மாவட்ட பிரதிநிதி ராமநாதன், மாணவரணி பொருளாளர் ஆர்சி மாரியப்பன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் கண்ணன், கூட்டுறவு சங்கத் தலைவர் செல்வம், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் உமா மகேஸ்வரன், காளிராஜ், நிர்வாகிகள் ராஜ்குமார், செந்தில்குமார், நிர்மலாதேவி, கந்தவேல், நூர் முகம்மது உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×