search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலுக்காக வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல்நிலை சரி பார்க்கும் பணி
    X

    வாக்குப்பதிவு எந்திரங்களில் முதல்நிலை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருவதை கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பாராளுமன்ற தேர்தலுக்காக வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல்நிலை சரி பார்க்கும் பணி

    • பாராளுமன்ற தொகுதி தேர்தல் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ள எந்திரங்களை பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • இந்திய தேர்தல் ஆணைய நேரடி பார்வையில் இப்பணிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர சேமிப்பு அறையில் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ள எந்திரங்களை முதல் நிலை சரிபார்க்கும் பணிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேனி பாராளுமன்ற தொகுதி வாக்கு பதிவிற்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள், வாக்குப்பதிவை சரிபார்க்கும் எந்திரங்கள், ஆகியவற்றை வாக்குப்பதிவு எந்திர கிட்டங்கியில் இந்திய தேர்தல் ஆணைய ஆணை மற்றும் நடைமுறைகளை பின்பற்றி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் முதல்நிலை சரிபார்க்கும் பணிகள் தொடங்கப்பட்டது.

    இப்பணிகள் அனைத்தும் அடுத்த மாதம் 10ந் தேதி வரை நடைபெறும். இப்பணி களை மேற்கொள்வதற்காக இந்திய தேர்தல் ஆணை யத்தால் நியமிக்கப்பட்ட பெங்களூரு பெல் நிறுவனத்தில் பயிற்சி பெற்ற 8 பொறியாளர்கள் மூலம் நடைபெற உள்ளது. இந்திய தேர்தல் ஆணைய நேரடி பார்வையில் இப்பணிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×