search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    686 வாக்குச் சாவடி மையங்களில் வாக்காளர் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்
    X

    686 வாக்குச் சாவடி மையங்களில் வாக்காளர் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்

    • நாமக்கல் மாவட்டத்தில் 9.11.2022 முதல் 8.12.2022 வரை சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டி யல் திருத்தப்பணிகள் நடை பெற்று வருகிறது.
    • வருகின்ற 26.11.2022 மற்றும் 27.11.2022 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாவட்டத்திலுள்ள 686 வாக்குச் சாவடி மையங்களிலும் இப்பணி நடைபெறுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி. சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-

    நாமக்கல் மாவட்டத்தில் 9.11.2022 முதல் 8.12.2022 வரை சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டி யல் திருத்தப்பணிகள் நடை பெற்று வருகிறது. அதன்படி வருகின்ற 26.11.2022 மற்றும் 27.11.2022 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாவட்டத்திலுள்ள 686 வாக்குச் சாவடி மையங்களிலும் இப்பணி நடைபெறுகிறது. இந்நாட்களில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் வழங்கலாம்.

    இம்முகாமின்போது, 01.01.2023 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் (அதாவது 31.12.2004 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவர்கள்) பெயரானது ஜனவரி-2023 மாதம் வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும்மற்றும் 31.12.2005 அன்றோஅல்லதுஅதற்கு முன்னரோ பிறந்தவர்களும் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம்.

    இவர்களின் பெயரானது 18 வயது பூர்த்தியடைந்த காலாண்டில் (ஏப்ரல்-2023, ஜூலை-2023, அக்டோபர்-2023) வெளி யிடப்படும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும். மேலும், இந்த வாய்ப்பை பயன்படுத்தி இதுவரை தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்காதவர்கள் இணைத்துக் கொள்ளு மாறும் கேட்டுக் கொள்கி றேன்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×