search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்
    X

    வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்

    • முகாம்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது.
    • ஆதார் எண், கைபேசி எண் இணைக்காத வாக்காளர்கள் படிவம் 6-பி பூர்த்தி செய்தும் வழங்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் வசதிக்காக இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது.

    நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) இந்த சிறப்பு முகாம்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது.

    இந்த சிறப்பு முகாமில் 2023 ஜனவரி 1-ம் தேதியன்று 18 வயது நிரம்பியவர்கள் அதாவது 2005 ஜனவரி 1-ம் தேதியன்றோ அல்லது அதற்கு முன்பாக பிறந்தவர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமல் உள்ளவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் எண் 6ஐ அருகாமையில் உள்ள வாக்கு சாவடிகளில் பெற்று பூர்த்தி செய்து அதனுடன் வயது மற்றும் இருப்பிடத்திற்கான ஆவண நகல்களை இணைத்து தங்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தினை படிவத்தில் ஒட்டி சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கலாம்.

    மேலும் இறப்பு, நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவு போன்ற காரணங்களின் அடிப்படையில் பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் 7-ஐ பூர்த்தி செய்தும், வாக்காளர் பட்டியலில் உள்ள அனைத்து வகையான பிழை திருத்தங்கள் மேற்கொள்ள தொகுதி மாற்றம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய, பெயர், உறவுமுறை, புகைப்படம் மாற்றம் செய்ய, காணாமல் போன வாக்காளர் அட்டைக்கு பதிலாக மாற்று அட்டை பெற படிவம் 8-ஐ பூர்த்தி செய்தல், இதுவரை வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண், கைபேசி எண் இணைக்காத வாக்காளர்கள் படிவம் 6-பி பூர்த்தி செய்தும் வழங்கலாம்.

    பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

    அலுவலக வேலை நாட்களில் தாசில்தார் அலுவலக தேர்தல் பிரிவில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×