search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு 400 அடி நீள பிரமாண்ட பந்தல்
    X

    ஆண்டாள் கோவில் தேர் அலங்கரிக்கப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு 400 அடி நீள பிரமாண்ட பந்தல்

    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் திருவிழா வருகிற 1-ந் தேதி நடக்கிறது.
    • இதற்காக 400 அடி நீள பிரமாண்ட பந்தல், தேர் அலங்கரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 108 வைணவ தலங்களில் முக்கி யமானதாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறும்.

    தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆடிப்பூர திருவிழா மிகவும் எளிமையாக நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர திருவிழாவில் முன்புபோல் பக்தர்கள் திரளாக கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வருகிற ஆகஸ்டு 1-ந் தேதி இந்த ஆண்டுக்கான தேரோட்டம் நடக்கிறது. இதனை முன்னிட்டு ஆண்டாள் கோவில் பெரிய தேர் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. இந்த பணி இரவு பகலாக நடந்து வருகிறது.

    அதேபோல் கோயில் முன்பு உள்ள ஆடிப்பூர கொட்டகையில் பக்தர்கள் ஆன்மீக நிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவுகளை கண்டு களிக்க சுமார் 5 ஆயிரம் பக்தர்கள் அமரும் வகையில் பிரம்மாண்டமான பந்தல் பல வண்ண துணிகள் மற்றும் யானை பொம்மைகள் மூலம் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கு முத்தாய்ப்பாக ஆண்டாள் ஆடிப்பூர பந்தலில் இருந்து வெளியே வந்து தேசிய நெடுஞ்சாலை வரை சுமார் 400 அடி நீளத்திற்கு பக்தர்களை வரவேற்கும் வண்ணம் பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் முகப்பு கோயஉட்டை நுழைவுவாயில் போல அமைக்கப்பட்டுள்ளது.

    இதனை உள்ளூர் பக்தர்கள் மட்டுமல்லாமல் வெளியூர் பக்தர்களும் ஆச்சரியத்துடன் வியப்புடன் பார்த்து செல்கின்றனர். தமிழ்நாட்டில் அலங்கார பந்தல் அமைப்பதில் கைதேர்ந்தவர்கள் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த வர்கள்தான் முதல் இடத்தில் உள்ளனர். இவர்கள் தான் இந்த பந்தலை அமைத்து வருகின்றனர்.

    ஆடிப்பூர கொட்டகை மற்றும் பக்தர்களை வரவேற்கும் பந்தலை உள்ளூரையைச் சேர்ந்த பந்தல் அமைப்பாளர் அய்யனார் என்பவர் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட உள்ளூர் தொழிலாளர்களை வைத்து பார்போர் வியக்கும் வண்ணம் இந்த பிரம்மாண்ட அலங்கார பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

    தேரோட்டத்தை முன்னி ணட்டு தேரில் அலங்காரங்கள் அமைக்கும் இறுதி கட்ட பணி நேற்று நடைபெற்றது. தேரின் மேல் பகுதியில் கலசங்கள் அமைத்து கொடி கட்டப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்து ராஜா மற்றும் ஊழி யர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×