என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்து நடந்த பகுதியில் கிரேன் உதவி மூலம் கார், சுற்றுலா பஸ் அப்புறப்படுத்தப்பட்டது.
சுற்றுலா பஸ்-கார் நேருக்கு நேர் மோதல்
- சுற்றுலா பஸ்-கார் நேருக்கு நேர் மோதியது.
- இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து ராஜபாளையத்தில் நடந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 5 பேர் இன்று அதிகாலை காரில் புறப்பட்டனர். இவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த சுற்றுலா பஸ் எதிர்பாராத விதமாக கார் மீது பயங்கரமாக மோதியது.
இதில் கார் மற்றும் பஸ்சின் முன் பகுதி கடும் சேதமடைந்தன. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த விஜயலட்சுமி (வயது37), மாலதி(45), சுப்புலட்சுமி (35), மகேந்திரன் (21) ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை நத்தம்பட்டி போலீசார் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தில் சுற்றுலா பஸ்சில் பயணித்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து நத்தம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






