என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருஇருதய ஆண்டவர் ஆலய பெருவிழா
- ஸ்ரீவில்லிபுத்தூர் திருஇருதய ஆண்டவர் ஆலய பெருவிழா நடந்தது.
- தினமும் மாலையில் நவநாள் திருப்பலி நடந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் திருஇருதய ஆண்டவர் ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அனைத்து பணிக்குழுக்களின் இயக்குநர் பெனடிக்ட் பர்னபாஸ் தலைமையில் மறைவட்ட அதிபர் சந்தன சகாயம், உதவிப் பங்குத் தந்தை ஜேம்ஸ் ஆகியோர் இணைந்து நிறைவேற்றிய கூட்டுத் திருப்பலியுடன் விழா தொடங்கியது.
தினமும் மாலையில் நவநாள் திருப்பலி நடந்தது. இறுதிநாளில் மதுரை உயர்மறை மாவட்ட முதன்மை குரு ஜெரோம் எரோனிமுஸ் தலைமையில் மறைவட்ட அதிபர் சந்தன சகாயம், உதவிப்பங்குத் தந்தை ஜேம்ஸ் ஆகியோர் இணைந்து நிறைவேற்றிய ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடந்தது. அதனைத் தொடர்ந்து விழாவின் சிறப்பு நிகழ்வாக நற்கருணை பவனி ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயம் வந்தடைந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்பு நற்கருணை ஆசீர்வாதம் நடைபெற்று கொடியிறக்கம் செய்யப்பட்டு விழா நிறைவுபெற்றது.






