search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ. 70.57 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலகம்
    X

    விருதுநகரில் ரூ. 70.57 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். அருகில் அமைச்சர்கள் எ.வ.வேலு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கலெக்டர் மேகநாதரெட்டி, தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. மற்றும் பலர் உள்ளனர். 

    ரூ. 70.57 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலகம்

    • விருதுநகரில் ரூ. 70.57 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கான அடிக்கல்லை நாட்டி தொடங்கி வைத்தார்.

    விருதுநகர்

    விருதுநகரில் ரூ. 70.57 கோடியில் புதிதாக ஒருங்கிணைந்த மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு செயலர்கள் குமார் ஜெயந்த், பிரபாகர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய கலெக்டர் அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

    இதில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் நன்றி கூறினார்.

    முன்னதாக விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையான கே.உசிலம்பட்டி, சத்திரரெட்டியபட்டி, போக்குவரத்து பணிமனை ஆகிய பகுதிகளில் தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் பழைய பஸ் நிலையம் முன்புள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    Next Story
    ×