search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகாசியில் 5 நாட்கள் விமரிசையாக நடந்த பத்திரகாளியம்மன் கோவில் தேரோட்டம்
    X

    நிலைக்கு வந்தடைந்த தேரை படத்தில் காணலாம்.

    சிவகாசியில் 5 நாட்கள் விமரிசையாக நடந்த பத்திரகாளியம்மன் கோவில் தேரோட்டம்

    • சித்திரை பொங்கல் விழாவை முன்னிட்டு சிவகாசியில் 5 நாட்கள் விமரிசையாக நடந்த பத்திரகாளியம்மன் கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
    • பக்தர்கள் தேர் சக்கரங்களில் தேங்காய் உடைத்து வழிபட்டனர்.

    சிவகாசி

    சிவகாசியில் பிரசித்தி பெற்ற பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை பொங்கல் திருவிழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. விழா தொடங்கிய நாள் முதல் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார். மேலும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் பொங்கல் வைத்தும், பல்வேறு நேர்த்திக்கடன் களை செலுத்தியும் வழிபாடு நடத்தினர்.

    இந்த திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் பத்திரகாளியம்ம னும், சிறிய தேரில் விநாயக ரும் எழுந்தருளினர். 5 நாட்கள் மாலையில் நடந்த தேரோட்டத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர் கள் கலந்து கொண்டு பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    பக்தர்கள் வெள்ளத்தில் ரத வீதிகளில் தேர் ஆடி அசைந்து வந்தது கண் கொள்ளாக்காட்சியாக இருந்தது. 5 நாட்கள் வீதிகளை சுற்றி வந்த தேர் நேற்றைய தினம் நிலைக்கு வந்தடைந்தது. அப்போது பக்தர்கள் தேர் சக்கரங்களில் தேங்காய் உடைத்து வழிபட்டனர்.

    Next Story
    ×