search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மந்தையம்மன் கோவிலில் முளைப்பாரி உற்சவ விழா
    X

    முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றபோது எடுத்தபடம்.

    மந்தையம்மன் கோவிலில் முளைப்பாரி உற்சவ விழா

    • மந்தையம்மன் கோவிலில் முளைப்பாரி உற்சவ விழா நடந்தது.
    • வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மந்தையம்மனை வழிபட்ட னர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி அருகே இருஞ்சிறை கிரா மத்தில் உள்ள மந்தையம்மன் கோவிலில் முளைப்பாரி உற்சவ திருவிழா கடந்த வாரம் பல்வேறு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷே கங்களுடன் காப்புக்கட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கி யது. இந்த நிலையில் மந்தை யம்மன் கோவில் திருவிழா வின் ஒரு பகுதியாக நடை பெற்ற திருவிளக்கு பூஜை வெகு விமரிசையாக நடை பெற்றது. இந்த திபூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு சுலோகங்க ளுடன் துதி பாடி பய பக்தி யுடன் அம்மனை தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ் வாக நேற்று முளைப்பாரி எடுத்து வந்த பொதுமக்கள் கிராமத்தின் முக்கிய வீதிகள் மற்றும் வழக்கமான கோவில்களில் வைத்து வழி பட்டனர். அதன் பின்னர் கோவிலின் அருகேயுள்ள குளத்தில் முளைப்பாரியை பொதுமக்கள் கரைத்தனர்.

    இதனையடுத்து கோவி லில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பொதுமக்கள் அனைவரும் வழிபாடுகள் செய்த நிலையில் முளைப் பாரி உற்சவம் நிறைவ டைந்தது.இந்த சிறப்பு பூஜையில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஏராள மானோர் கலந்து கொண்டு மந்தையம்மனை வழிபட்ட னர்.

    Next Story
    ×