என் மலர்
உள்ளூர் செய்திகள்

மல்லிகை சாகுபடி பயிற்சி
- மல்லிகை சாகுபடி பயிற்சி நடந்தது.
- உதவி தோட்டக்கலை அலுவலர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
அருப்புக்கோட்டை
தமிழக அரசு 23-24-ம் ஆண்டு வேளாண் பட்ஜெட்டில் விருதுநகர் மதுரை திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளடக்கி மல்லிகை மண்டலமாக தரம் உயர்த்தப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டது.
அதற்காக தோட்டக்கலைத் துறை மூலம் முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மல்லிகை சாகுபடி விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டாரம் தொட்டியாங்குளம் கிராமத்தில் நடைபெற்றது.
இதில் மல்லிகை சாகுபடி செய்யும் விவசாயிகள் பங்கேற்றனர் அவர்களுக்கு வேளாண் அறிவியல் நிலையம் (கே.வி.கே) இணை பேராசிரியர்கள் அருள், அரசு (தோட்டக்கலை) மற்றும் பரமசிவன் ஆகியோர் பயிற்சி வழங்கினர்.
இப்பயிற்சியில் மல்லிகை சாகுபடி தொழில், கவாத்து முறைகள், பேரூட்டம் மற்றும் நுண்ணூட்டம் மேலாண்மை, பருவமில்லா காலங்களில் மல்லிகைப்பூ உற்பத்தி பெருக்குதல், பூச்சி, இயற்கை முறையில் மல்லிகை வளர்ப்பு பற்றியும் எடுத்துரைத்து விவசாயிகளுக்கு மல்லிகை சாகுபடியில் உள்ள சந்தேகங்களை வயல்வெளி சென்று விளக்கம் அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை மாரீஸ்வரி, தோட்டக்கலைஉதவி இயக்குனர் கண்ணன், தோட்டக்கலை அலுவலர் பூ கலைவாணி, உதவி தோட்டக்கலை அலுவலர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.






