search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    விவரங்கள் குறிப்பிடாத பட்டாசு பொட்டலங்களை  விற்றவர்கள் மீது வழக்கு
    X

    விவரங்கள் குறிப்பிடாத பட்டாசு பொட்டலங்களை விற்றவர்கள் மீது வழக்கு

    • விவரங்கள் குறிப்பிடப்படாமல் பட்டாசு பொட்டலங்களை விற்பனைக்கு வைத்திருந்த 42 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.
    • தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    விருதுநகர்

    சென்னை, முதன்மை செயலாளர் / தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த், ஆணையின்படியும் மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன் ஆலோசனையின்படியும், மதுரை தொழிலாளர் இணை ஆனையர் சுப்பிரமணியன் வழிகாட்டுதலின்படியும், விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெ.காளிதாஸ் தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வர்கள் அடங்கிய குழுவினர் விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு கடைகளில் சட்டமுறை எடையளவு பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் திடீர் சோதனை நடத்தினர்.

    சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் பொட்டலப் பொருட்களின் மேல் பொருளின் பெயர், தயாரிப்பாளர் பெயர் மற்றும் முழு முகவரி நிகர எண்ணம், அதிகபட்ச சில்லரை விற்பனை விலை (வரிகள் உட்பட) பொட்டலமிட்ட தயாரித்த மாதம், வருடம், நுகர்வோர் தொடர்பு கொள்ள தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரி ஆகியவை கட்டாயமாக குறிப்பிடப்பட்டு விற்பனை செய்யவேண்டும்.

    அவ்வாறு சட்டவிதிகளி ன்படி பட்டாசு பொட்ட லங்களில் உரிய விவரங்கள் குறிப்பிடாமல் விற்பனைக்கு வைத்திருந்த 42 வியாபாரிகளின் பட்டாசு பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரசீது வழங்கப்பட்டது.

    பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் பொட்டலப் பொருட்களின் மேல் உரிய விவரங்கள் குறிப்பிடப்படாத வணிகர்கள் மீது முதலாவது குற்றத்திற்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதமும், 2-ம் முறை குற்றத்திற்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதமும், அதற்கு மேற்பட்ட குற்றத்திற்கு ரூ.1 லட்சம் அல்லது ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது இரண்டும் சேர்ந்து நீதிமன்றத்தின் மூலம் விதிக்க வழிவகை உள்ளது.

    இந்த சோதனையில் விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலக ஆட்சி எல்லைக்கு உட்பட்ட விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகளில் தொழிலாளர் துறையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர்கள் பாத்திமா, செல்வராஜ், தயாநிதி முருகன், சிவசங்கரி, துர்கா மற்றும் உமா மகேஸ்வரன் ஆகியோர் ஈடுபட்டனர்.

    இந்த தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெ.காளிதாஸ் தெரிவித்தார்.

    Next Story
    ×