search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அங்கன்வாடி பணியாளர்கள் விரைவில் நியமனம்
    X

    பயனாளிகளுக்கு ஆட்டு குட்டிகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    அங்கன்வாடி பணியாளர்கள் விரைவில் நியமனம்

    • ராஜபாளையம் தொகுதியில் அங்கன்வாடி பணியாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்.
    • இந்த தகவலை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

    ராஜபாளையம்

    விருதுநகர்மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ராஜபாளையம் தொகுதியில் ஏழ்மை நிலையிலுள்ள கைம்பெண், கணவரால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு 100 சதவீத மானியத்தில் 5 செம்மறியாடு, வெள்ளாட்டு குட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி ராஜபாளையம் அருகே உள்ள சொக்க நாதன்புத்தூரில் நடந்தது.

    பெண்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் திட்டம் (2021-22) சார்பில் 100 பயனாளிகளுக்கு 500 ஆட்டு குட்டிகளை ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன், யூனியன்சேர்மன் சிங்கராஜ் ஆகியோர் வழங்கினர்.

    விழாவில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பேசுகையில், கருணாநிதி ஆட்சிக்காலத்தில் விதவை என்ற பெயரை கைம்பெண் என மாற்றியமைத்து அவர்களின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்.

    அதுபோல் தற்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் பெண்களின் வளர்ச்சிக்காக அரசு நகர்ப்புற பேருந்துகளில் இலவச பயணம், மாணவி களுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகையாக மாதம் ரூ.1000 என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    அதன்வழியில் பெண்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் நோக்கத்தில் ஆடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    எப்போதும் பெண்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது தி.மு.க.வும், தமிழக முதல்வரும் தான். விரைவில் அங்கன்வாடி பணியாளர்கள் பணி நிரப்பப்படவுள்ளது.அதில் ஏழை, எளிய, கைம்பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.

    இந்த நிகழ்வில் மண்டல இணை இயக்குநர் ரவிச்சந்திரன், துணை இயக்குநர் கோவிந்தராஜ், உதவி இயக்குநர் ராஜேஸ்வரி முனியசாமி, தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், கிளை செயலாளர்கள் அமுதரசன், சின்னதம்பி, சீதாராமன், தங்கப்பன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மாரிமுத்து, மகளிரணி சொர்ணம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×