search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தலைக்கேறிய போதையால் கிணற்றில் தவறி விழுந்து உயிரை விட்ட வாலிபர்
    X

    போதையில் கிணற்றில் தவறி விழுந்து பலியான பாண்டித்துரையின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள். உள்படம்: பாண்டித்துரை.

    தலைக்கேறிய போதையால் கிணற்றில் தவறி விழுந்து உயிரை விட்ட வாலிபர்

    • தலைக்கேறிய போதையால் வாலிபர் கிணற்றில் தவறி விழுந்து பலியானார்.
    • கணவரின் உடலை பார்த்து காதல் மனைவி கதறி அழுதார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணாநகர் பகுதி–யைச் சேர்ந்தவர் புலியூர்சாமி மகன் பாண்டித்துரை (வயது 30). கூலி வேலை பார்த்து வந்த இவர் மலைவாழ் மக் கள் இனத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணை காதலித்து திரு–ம–ணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 1 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    வேலைக்கு சென்று கிடைக்கும் சம்பள பணத் தின் பெரும் பகுதியை பாண்டித்துரை குடித்தே அழித்து வந்தார். இதனால் குடும்பம் நடத்தவும், குழந் தையை வளர்க்கவும் அவ–ரது மனைவி ஐஸ்வர்யா மிகவும் சிரமப்பட்டு வந்தார். பலமுறை கண்டித்தும், அறி–வுரை கூறியும் அவர் திருந்த–வில்லை. இதனால் கடந்த இரண்டு தினங்களாக கண–வன், மனைவிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பாண்டித்துரை நேற்று, ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி அருகே இருந்த கிணற்றின் மேட்டு பகுதியில் அமர்ந்து குடித்தார். அள–வுக்கு அதிகமான போதை–யில் இருந்த அவர் எழுந்து வீட்டுக்கு செல்ல முயன்ற–போது எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந் தார்.

    இதைப்பார்த்த அங்கிருந் த–வர்கள் கிணற்றுக்குள் இறங்கி அவரது கையைப் பிடித்து இழுத்து காப்பாற்ற முயன்றனர். ஆனால் தலைக் கேறிய போதையில் இருந்த அவரால் கிணற்றுக்குள் இருந்து எழுந்து வரமுடிய–வில்லை. தொடர்ந்து போராடியும் பலனளிக்கா–மல் போனது. ஒரு சில விநாடிகளில் அவர் தண்ணீ–ரில் மூழ்கினார்.

    உடனடியாக இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தக–வல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த நிலைய அதிகாரி சீனிவாசன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட தீய–ணைப்பு வீரர்கள் உடலை தேடும் பணி ஈடுபட்டனர். ஒரு வழியாக 12 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் நள்ளிரவு 2 மணியளவில் பாண்டித்துரையின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக் காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து ராஜபாளை–யம் தெற்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மது போதை–யால் உயிரை விட்ட கண–வரின் உடலை பார்த்து அவரது காதல் மனைவி கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

    Next Story
    ×