search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ரூ. 9 லட்சம் உண்டியல் காணிக்கை
    X

    விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்ற போது எடுத்த படம்.

    விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ரூ. 9 லட்சம் உண்டியல் காணிக்கை

    • உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
    • 6 கிராம் தங்கம் மற்றும் 200 கிராம் வெள்ளிப் பொருட்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.

    கடலூர்:

    விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர்கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், விருத்தகிரீ்ஸ்வரர் கோவில் செயல் அலுவலர் மாலா முன்னிலையில், கோவில் மேலாளர் பார்த்தசாரதி மேற்பார்வையில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    கோவிலில் உள்ள 9 நிரந்தர உண்டியல்கள் மற்றும் 1 திருப்பணி உண்டியல் என 10 உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டன. இதில் 9 லட்சத்து 18 ஆயிரத்து, 53 ரூபாய் ரொக்கம், 6 கிராம் தங்கம் மற்றும் 200 கிராம் வெள்ளிப் பொருட்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன. உண்டியல் எண்ணும் பணி முடிந்தபின் காணிக்கைகளை கோவில் ஊழியர்கள் கோவிலின் வங்கிக் கணக்கில் செலுத்தினர்.

    Next Story
    ×