என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராணுவ வீரர் அந்தோணி சுரேசுக்கு நன்றி தெரிவிக்க கிராம மக்கள் ஊர்வலமாக சென்ற காட்சி.
கொரோனா காலத்தில் உதவிய ராணுவ வீரருக்கு ஊர்வலமாக சென்று நன்றி தெரிவித்த கிராம மக்கள்
- கொரோனா காலத்தில் உதவிய ராணுவ வீரருக்கு ஊர்வலமாக சென்று கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
- நன்றியோடு தங்களை காண வந்த கிராம மக்களுக்கு ராணுவவீரர் மரக்கன்றுகள் வழங்கினார்.
சாயர்புரம்:
ஏரல் தாலுகா கணபதி சமுத்திரத்தில், கடந்த கொரோனா காலங்களில் கிராம மக்கள் வாழ்வாதாரம் பொிதும் பாதிப்படைந்தனர்.
கிராம மக்களின் நிலை அறிந்த இதே பகுதியை சேர்ந்த ராணுவ அதிகாரியான அந்தோணி சுரேஷ் கிராம மக்களுக்கு உதவினார்.
தற்போது விடுமுறையில் வந்த ராணுவ அதிகாரிக்கு சாயர்புரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கணபதி சமுத்திரத்திரம் கிராம மக்கள் நேரில் சென்று நன்றி செலுத்தும் விதமாக சால்வை மற்றும் விளைபொருட்கள் வழங்கினார்.
மேலும் கணபதி சமுத்திரம் சிறுவா் சிறுமியா் பாரம்பரிய வீர கலையான சிலம்ப கலைஞர்களோடு ஊர்வலமாக சென்று நன்றி தெரிவித்தனர். நன்றியோடு தங்களை காண வந்த கிராம மக்களுக்கு ராணுவவீரர் மரக்கன்றுகள் வழங்கினார்.
Next Story






