search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண்டமனூர் அருகே சுகாதாரமற்ற குடிநீரை பருகும் கிராம மக்கள்-தொற்றுநோய் பரவும் அபாயம்
    X

    பொதுமக்கள் பிடித்து செல்லும் சுகாதாரமற்ற குடிநீர்.

    கண்டமனூர் அருகே சுகாதாரமற்ற குடிநீரை பருகும் கிராம மக்கள்-தொற்றுநோய் பரவும் அபாயம்

    • கூட்டு குடிநீர் திட்ட குழாய்களில் கசியும் நீரை போட்டி போட்டு பெண்கள் குடங்களில் எடுக்கும் நிலைக்கு கண்ட மனூர் மக்கள் தள்ளப்பட்டு ள்ளனர்.
    • கண்டமனூர் கிராமத்தில் சுகாதாரமான குடிநீரை தடையற்ற முறையில் வழங்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கண்டமனூர் கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் குடிநீர் தேவைக்காக 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு முதல் 3 லட்சம் லிட்டர் கொள்ள ளவு கொண்ட 10க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டி கள் உள்ளன.

    இந்த குடிநீர் தேவைக்காக வீரபாண்டி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குன்னூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 6 லட்சம் லிட்டர் குடிநீர் நாள்தோறும் வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் பல்வேறு காரணங்களை கூறி கண்ட மனூர் ஊராட்சி நிர்வாகம் மூலம் குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு ஒரு முறை தான் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுவ தாகவும், இதனால் குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    குடிநீர் பற்றாக்குறையால் மாநில நெடுஞ்சாலையில் செல்லும் கூட்டு குடிநீர் திட்ட குழாய்களில் கசியும் நீரை போட்டி போட்டு பெண்கள் குடங்களில் எடுக்கும் நிலைக்கு கண்ட மனூர் மக்கள் தள்ளப்பட்டு ள்ளனர்.

    கானாவிலக்கு - வருச நாடு செல்லும் மாநில நெடுஞ்சாலையில் கண்டமனூர் பகுதியில் செல்லும் கூட்டு குடிநீர் திட்ட குழாய்களில் 2 இடங்களில் கசிந்து வரும் சுகாதாரமற்ற நீரை டப்பா க்களில் போட்டி போட்டுக் கொண்டு இறைத்து சல்லடையில் வடிகட்டி குடங்களில் நிரப்பி நாள்தோறும் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.

    தண்ணீர் கலங்கலாக வந்தாலும் வேறு வழி இல்லை என்று கூறும் மக்கள் இதனையே குடிநீராக தொடர்ந்து குடித்து வருவதாகவும், இதனால் பல்வேறு நோய் பாதிப்புகளை சந்தித்து வருவதாகவும், அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படுவதோடு, பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது டெங்கு, மலேரியா, வைரஸ் உள்ளிட்ட காய்ச்சல்கள் வேகமாக பரவி வரும் நிலையில் சுகாதாரமற்ற குடிநீர்தான் இப்பகுதி மக்களுக்கு குறைந்த அளவு கிடைக்கிறது. எனவே மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கண்டமனூர் கிராமத்தில் சுகாதாரமான குடிநீரை தடையற்ற முறையில் வழங்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×