என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கிராம மக்கள் சாலைமறியல்
  X

  நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  கிராம மக்கள் சாலைமறியல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, அவ்வழியாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு இறந்து விட்டார்.
  • இறந்தவரின் உடலை நடுரோட்டில் வைத்து வளத்தாமங்கலம் மெயின் ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  பாபநாசம்:

  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா வளத்தாமங்கலம் கிராமம் வடக்கு தெருவில் வசித்து வந்த பாலையன் மகன் சாய்ராமன் (வயது 19).

  கட்டிட வேலை பார்த்து வந்தவர். இவர் பாபநாசம் அருகே பண்டாரவாடை உப்புகாரன் ரயில்வேகேட் அருகில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, அந்த வழியாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு இறந்து விட்டார்.

  இதுகுறித்து கும்பகோணம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

  பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

  இந்நிலையில் சாய்ராமன் குடும்பத்தினர்கள், உறவின ர்கள், கிராமவாசிகள் ஆகியோர் சாய்ராமன் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இறந்தவரின் உடலை பிண ஊர்தி உடன் நடுரோட்டில் வைத்து வளத்தாமங்கலம் மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இதனால் பாபநாசம் சாலியமங்கலம் சாலையில் அரை மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

  சம்பவ இடத்திற்கு பாபநாசம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பூரணி, ஆய்வாளர் கலைவாணி ஆகியோர் விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

  இச் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

  Next Story
  ×