search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லளிகம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்
    X

    நல்லம்பள்ளி அடுத்த லளிகம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

    லளிகம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

    • 251 கிராம ஊராட்சிகளில் தொழி லாளர் தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் அந்தந்த ஊராட்சியில் உள்ள பொது இடத்தில் நேற்று நடைபெற்றது.
    • இலளிகம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில் தொழி லாளர் தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் அந்தந்த ஊராட்சியில் உள்ள பொது இடத்தில் நேற்று நடைபெற்றது.

    இந்த கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றியத்தால் நியமிக்க ப்பட்ட பார்வையாளர் கூட்ட நடவடிக்கைகளை பார்வையிட்டார்.

    இதையடுத்து நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், இலளிகம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில், இலளிகம் கிராம ஊராட்சியின் நிர்வாகம் மற்றும் பொதுசெலவினங்கள், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது, கிராம வளர்ச்சி திட்டம் (VPDP) , அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மேலும், இக்கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் சாந்தி தலைமையேற்று எங்கள் கிராமம்! எழில்மிகு கிராமம்!! என்ற உறுதிமொழியினை வாசிக்க ஊராட்சி மன்ற உறுப்பினர்களும், ஊராட்சியிலுள்ள வாக்கா ளர்கள், பொதுமக்கள் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் தருமபுரி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மாலா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திரு.பத்ஹி முகமது நசீர், துணை ஆட்சியர் பயிற்சி செந்தில் குமார்,நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் புனிதம் பழனிசாமி, இலளிகம் ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா மாதேஷ்குமார், துணைத் தலைவர் கிருஷ்ணன், பழங்குடியினர் நல திட்ட அலுவலர் கண்ணன், நல்லம்பள்ளி வட்டாட்சியர் திரு.ஆறுமுகம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம், தாட்கோ மாவட்ட மேலாளர் சிட்டிபாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×