என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஐயாறப்பர் கோவிலில் அப்பர் கயிலை காட்சி
    X

    அப்பர் கயிலைக்காட்சி நடைபெற்று பக்தர்களிடையே அப்பர் குட்டையில் எழுந்தருளினார்.

    ஐயாறப்பர் கோவிலில் அப்பர் கயிலை காட்சி

    • காலையில் ஐயாறப்பர் மற்றும் அம்பாள் புஷ்யமண்டபத்துறை காவிரி ஆற்றில் எழுந்தருளி தீர்த்தவாரி நடந்தது.
    • ஐயாறப்பர் தமது பரிவாரங்களுடன் அப்பர் பெருமான் எதிரே எழுந்தருளி கயிலாய காட்சி காணும் வைபவம் நடந்தது.

    திருவையாறு:

    தருமையாதீனத்திற்கு சொந்தமான திருவையாறு அறம் வளர்த்த நாயகி அம்மன் உடனாகியஐயாற ப்பர் கோவிலில் அப்பர் கயிலைக்காட்சி விழா நேற்றிரவு நடந்தது.

    முன்ன தாக, காலையில் ஐயாறப்பர் மற்றும் அம்பாள் புஷ்யம ண்டபத்துறை காவிரி ஆற்றில் எழுந்தருளி தீர்த்தவாரி நடந்தது.இதனைத் தொடர்ந்து சுவாமி அப்பர் குட்டையில் எழுந்தருளினார். அப்பர் பெருமான் அந்தக் குட்டை யில் தீர்த்தவாரி கொடுத்து, மூழ்கி எழுந்து தமக்கு எதிரே எழுந்தருளிய அளம்வளர்த்த நாயகி அம்மன் சமேத ஐயாப்பர் எழுந்தருளிய கயிலைக் காட்சி காணும் விழா நடந்தது.

    பின்னர் சுவாமி,அம்பா ளுடன் அப்பர்பெருமானும் வடக்கு வீதி வழியாக ஐயாறப்பர் கோயில் மண்டபத்தில் எழுந்தருளி னார்கள். அங்கு தருமையா தீனம் 27- வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்மந்த பரமாச்சார்யார் சுவாமிகளின் தலைமையில் தேவாரம், திருவாசகம், திருமுறை விண்ணப்பமும், இன்னிசை நாட்டியக் கலைநிகழ்ச்சிகளும், குரும ணிகளின் ஆருட்பேருரையும் நடந்தது.இரவு சூரிய புஷ்கரணி பிரகாரத்தில் தென்கோபுரம் எதிரே கயிலைநாதனாம் அறம்வளர்த்த நாயகி அம்மன் சமேதஐயாறப்பர் சுவாமிகள் தமது பரிவா ரங்களுடன் எழுந்தருள அப்பர் பெருமான் எதிரே எழுந்தருளி கயிலாயக் காட்சி காணும் வைபவம் நடந்தது. இதனைத் தொடர்ந்து குருமணிகள் மாதர்பிறைக் கண்ணியானை முதலிய அப்பரின் பதிகங்களைப் பாடி அருளாசி வழங்கி னார்கள்.

    இவ்விழாவில் ஆயிர க்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கயிலைக் காட்சியை தரிசித்தார்கள்.இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தருமையாதீன அருளாணைப்படிதிருவை யாறு ஐயாறப்பர்ஆலய நிர்வாகிகள்

    செய்திருந்தார்கள்.

    Next Story
    ×