search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கக்கரம்பட்டி கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் - அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
    X

    கால்நடை மருத்துவ முகாமை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தபோது எடுத்தபடம்.

    கக்கரம்பட்டி கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் - அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்

    • தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில் கால்நடை மருத்துவ முகாம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது.
    • முகாமில் சிறந்த கால்நடை பராமரிப்போருக்கான மேலாண்மை விருதுகள் 8 பேருக்கு வழங்கப்பட்டது.

    புதியம்புத்தூர்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கக்கரம்பட்டி கிராமத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கால்நடை பராமரிப்பு துறை, ஆவின் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில் கால்நடை மருத்துவ முகாம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது.

    நிகழ்ச்சியில் சமூக நல மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். சிறந்த கால்நடை பராமரிப்போருக்கான மேலாண்மை விருதுகள் 8 பேருக்கு வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் சஞ்சீவி ராஜ், ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், நெல்லை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் செல்ல பாண்டியன், ஓட்டப்பிடாரம் யூனியன் துணைத்தலைவர் காசி விஸ்வநாதன், கோவில்பட்டி ஆர்.டி.ஓ. ஜேன் கிறிஸ்டிபாய், ஓட்டப்பிடாரம் தாசில்தார் சுரேஷ், கால்நடை பராமரிப்பு உதவி இயக்குனர் விஜயஸ்ரீ, குறுக்கு சாலை பஞ்சாயத்து தலைவர் முனியம்மாள், கொடியங்குளம் பஞ்சாயத்து தலைவர் அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×