என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி
- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது. இதனை வாக்காளர்கள் சரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- வாக்காளர் சரிபார்க்கும் பணி இன்று முதல் வருகிற செப்டம்பர் 29-ந் தேதிவரை நடைபெறும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் அட்டவணை அறிவித்துள்ளது. வாக்காளர் பட்டியல் வீட்டுக்கு, வீடு சரிபார்க்கும் பணி இன்று முதல் அடுத்த மாதம் 21-ந் தேதி வரை நடைபெற உள்ளது.வாக்காளர் பட்டியலில் உள்ள மோசமான, மங்கலான, தரமற்ற புகைப்படங்களை தரமாக மாற்ற மற்றும் வாக்குச் சாவடிகளின் எல்லைகள் மறுசீரமைப்பு மற்றும் திருத்த பணிகள் 22.08.2023 முதல் 29.09.2023 வரை நடைபெற உள்ளது.
ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் 17.10.2023 அன்று வெளியிடப்பட உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்த விண்ணப்பிக்கும் காலம் 17.10.2023 முதல் 30.11.2023 வரை நடைபெற உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் 05.01.2024 அன்று தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட உள்ளது.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், பி.எல்.ஏ.-2 வாக்குச்சாவடி முகவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள தேதிகளில் மேற்கண்ட பணிகளை தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் உடனிருந்து சிறப்பாக செய்து முடிக்க வேண்டும்.
கிழக்கு மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகள் வாரியாக 100 வாக்காளர்களுக்கு ஒரு முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த முகவர்கள் விரைந்து செயல்பட்டு அவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 100 வாக்காளர்களது விவரங்களை சேகரித்து உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






