search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேங்கைவயல் விவகாரம்- டி.என்.ஏ. பரிசோதனைக்காக 8 பேர் ரத்தம் தர திடீர் மறுப்பு
    X

    வேங்கைவயல் விவகாரம்- டி.என்.ஏ. பரிசோதனைக்காக 8 பேர் ரத்தம் தர திடீர் மறுப்பு

    • ரத்த மாதிரி அளிக்க மறுத்த 8 பேரும் வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்தவர்கள்.
    • 8 பேரும் ரத்த மாதிரி அளிக்க ஒத்துழைப்பு அளிக்காதது சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள 11 பேருக்கு இன்று காலை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் ரத்த மாதிரி சேகரிக்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஆயுதப்படை காவலர் முரளி ராஜா உள்ளிட்ட 3 பேர் மட்டுமே ரத்த மாதிரியை அளித்துள்ளனர். மற்ற 8 பேர் ரத்தம் தர வரவில்லை. அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதுபற்றி அவர்கள் கூறுகையில், ஏற்கனவே நாங்கள் இந்த பிரச்சினையில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறோம். மீண்டும் இதுபோன்ற சோதனை என்ற பெயரில் எங்களை குற்றவாளிகளாக ஆக்குவதற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் முயற்சி செய்கிறார்கள். எனவே நாங்கள் டி.என்.ஏ. பரிசோதனைக்கு வரமாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். ரத்த மாதிரி அளிக்க மறுத்த 8 பேரும் வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    இந்த 8 பேரும் ரத்த மாதிரி அளிக்க ஒத்துழைப்பு அளிக்காதது சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.

    ரத்த மாதிரி கொடுத்தவர்களின் பரிசோதனை முடிவுகள் 3 மாதத்திற்குள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×