என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் கலெக்டர் பெயரில் வாட்ஸ்அப் தகவல் அனுப்பி பண மோசடி முயற்சி
- போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்
- சைபர் கிரைம் போலீசார் விசாரணை
வேலூர் :
வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தியின் செல்போன் எண்ணிற்கு இன்று காலை வாட்ஸ் அப்பில் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் கலெக்டர் படத்துடன் வந்த அந்த வாட்ஸ்அப் எண்ணில் கிப்ட் வவுச்சர் குறைந்த கட்டணத்தில்ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை செய்ய படுகிறது. உடனடியாக 10 கிப்ட் வவுச்சர் வாங்கவும் என அதில் கூறியிருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி உடனடியாக இது குறித்து கலெக்டர் அலுவலக பொது மேலாளர் பாலாஜிக்கு தகவல் தெரிவித்தார். அவர் இது குறித்து ஆய்வு செய்தபோது கலெக்டர் பெயரில் மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட முயன்றது தெரியவந்தது.
இது தொடர்பாக வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதில் கலெக்டர் படத்துடன் மோசடி செய்ய முயன்ற கும்பல் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து தகவல் அனுப்பியது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.






