search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் புதிய பஸ் நிலைய கடைகள் விரைவில் திறக்கப்படும்
    X

    வேலூர் புதிய பஸ் நிலைய கடைகள் விரைவில் திறக்கப்படும்

    • மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
    • 83 கடைகளில் 68 கடைகள் மட்டுமே வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட உள்ளன

    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலைய வளாகத்தில் மொத்தம் 83 கடைகள் உள்ளன. இதில் 68 கடைகள் மட்டுமே வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட உள்ளன.

    வேலூர் மாநகராட்சி டெண்டர் விடுவதில் தாமதம் ஏற்பட்டதால், புதிய பஸ் நிலைய கடைகள் மூடப்பட்டு உள்ளன.

    இதன் விளைவாக, புதிய பஸ் நிலையத்தில் சிறு வியாபாரிகள் அமர்ந்து தண்ணீர் குளிர்பானம் பிஸ்கட் தின்பண்டங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.வியாபாரிகள் விற்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகமாக உள்ளது.

    பெரும்பாலும் நீண்ட தூரப் பயணிகள், வளாகத்தில் வியாபாரிகள் விற்கும் பொருட்களை வாங்க வேண்டியுள்ளது. பண்டிகை விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில், வியாபாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    பெண்கள் மற்றும் முதியோர்கள் உட்பட பயணிகள் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்து பொருட்களை வாங்க முடியவில்லை. இதனால் அதிக அளவு விலை கொடுத்து பொருட்களை வாங்கி அவதிப்படுகின்றனர்.

    புதிய பஸ் நிலைய வளாகத்தில் ஏ.டி.எம்.களை அமைக்க வங்கி அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தபடுகிறது.

    இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் கூறுகையில்:-

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் ஏலம் விடுவதற்கு எதிராக கோர்ட்டில் 14 வழக்குகள் தொடரப்பட்டது. இதை பல கட்டங்களாக மாநகராட்சி எதிர்கொண்டது. ஒரு வழியாக அந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது.

    வருகிற 25-ந் தேதி புதிய பஸ் நிலைய கடைகள் ஏலம் விட அறிவிப்பு செய்யப்ப ட்டுள்ளது. மற்றபடி வேறு எந்த தடையும் இல்லை. ஏலம் முடிந்து கடைகள் கண்டிப்பாக இந்த மாத இறுதியில் திறக்கப்படும் என்றார்.

    Next Story
    ×