search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை, சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
    X

    காட்பாடி கழிஞ்சூர் இ.பி காலணியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் அருகில் மேயர் சுஜாதா மற்றும் பலர் உள்ளனர்.

    வேலூர் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை, சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

    • கலெக்டர் உத்தரவு
    • மழை பாதிப்பு குறித்த 1077 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்

    வேலூர்:

    காட்பாடியில் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணிகளால் தெருக்களி சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன. இன்று காலை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் காட்பாடி கழிஞ்சூர் பவானி நகர் காந்தி நகர் பகுதிகளில் தண்ணீர் தேங்கிய பகுதிகள் மற்றும் கடந்த ஆண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார்.

    பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.குண்டு குழியுமான சாலைகளை தற்காலிகமாக சீரமைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளது. பொதுமக்கள் 24 மணி நேரமும் புகார் தெரிவிக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன.

    மழை பாதிப்பு குறித்த விவரங்களை 1077 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். வேலூர் மாநகராட்சி பகுதியில் சில இடங்களில் பாதாள சாக்கடை பணிகளால் தெருக்கள் மோசமாக உள்ளது.

    சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    அதன் அடிப்படையில் இன்று காட்பாடியில் ஆய்வு செய்யப்பட்டது. மாநகராட்சி பகுதியில் அகழி தண்ணீர் கோட்டை கோவிலுக்குள் வருவதை தடுக்க தற்போது ராட்சத மின்மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    பாதாள சாக்கடை பணிகள் நடந்து வரும் தெருக்களில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    கலெக்டர் ஆய்வின்போது மேயர் சுஜாதா, மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், தாசில்தார் ஜெகதீஸ்வரன் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×