என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
- தம்பியிடம் வாழ்வதற்கு பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு போனை துண்டித்தார்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் கஸ்பா அப்பாதுரை செட்டித்தெருவை சேர்ந்தவர் அத்தாவுல்லா (வயது 23). இவர் கோழி ஏற்றிச்செல்லும் வண் டியில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி ஆப்ரின் (20), இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது. ஆப்ரின் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி மதியம் வேலை முடிந்து வீடு திரும்பிய அத்தாவுல்லா அவருடைய தம்பியை செல் போனில் தொடர்பு கொண்டு வாழ்வதற்கு பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு போனை துண்டித்தார். அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக வீட்டிற்கு சென்று பார்த்தார்.
வீட்டின் உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக அறையை பார்த்தார். அப்போது அங்குள்ள மின்விசிறியில் அத்தாவுல்லா தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அவருடைய தம்பி அக்கம்பக்கத்தினர் உதவியு டன் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
முதலுதவிக்கு பின்னர் அவர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். அங்கு அத்தாவுல்லாவிற்கு தீவிர சிகிச்சை அளிக் கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று காலை அவர் சிகிச்சை
பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாகவேலூர் தெற்கு போலீஸ்சப்-இன்ஸ்பெக் டர் சேகரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.






