என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெங்கடேஸ்வரா பள்ளியில் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்ற காட்சி.
மர்ம காய்ச்சலுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
- 140 இடங்களில் நடந்தது
- 25 நடமாடும் குழுக்கள் மூலம் சிகிச்சை
வேலூர்:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தற்போது மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மர்ம காய்ச்சலுக்கு சிறுவர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் அதிக அளவில் பாதிப்பு அடைந்து வருகின்றனர். தமிழகத்தில் மர்ம காய்ச்சல் பரவுவதை தடுக்கும் விதமாக சிறப்பு மருத்துவ முகாம் நடந்து வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் சுகாதாரத் துறை சார்பாக 140 இடங்களில் இன்று சிறப்பு மருத்துவர் முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேலூர், குடியாத்தம், பேர்ணாம்பட்டு, பள்ளிகொண்டா உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் பள்ளி கூடங்கள் ஆகிய இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
மேலும் மர்ம காய்ச்சல் பாதித்ததாக அறியப்படும் பகுதிகளில் 25 நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் மருத்துவ முகாம் அமைத்து நோய் பாதித்தவர்களை பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை, காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா என மருத்துவ பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.






