என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளிகொண்டா பகுதியில் தொடர் பைக் திருட்டு
- போலீசார் விசாரணை
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மர்ம கும்பல் பைக்குகளை திருடி செல்வது தொடர்கதையாக நடந்து வருகிறது. இது குறித்து அதிக அளவில் போலீஸ் நிலையத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் கீழ்கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 24) என்பவர் தனது பைக்கை கந்தனேரியில் உள்ள மணல் குவாரி அருகே நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார்.
திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து விக்னேஷ் கொடுத்த புகாரின் பேரில் பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிகொண்டா பகுதியில் இதேபோல் அடிக்கடி பைக் திருட்டு நடப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.
திருட்டை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






