search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இறந்த பசுமாட்டை அகற்றாததால் சுகாதார சீர்கேடு
    X

    இறந்த பசுமாட்டை அகற்றாததால் சுகாதார சீர்கேடு

    • பக்கத்து நிலத்துகாரின் பசு மாடு முட்டியதில் இறந்ததாக புகார்
    • நஷ்ட ஈடு பெற்று தர வலியுறுத்தல்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த பள்ளகொள்ளை கிராமத்தை சேர்ந்த வர் குமாரசாமி, விவசாயி. இவர் சொந்தமாக பசுமாடு ஒன்றை வளர்த்து வந்தார். அந்த பசுமாடு தற்போது 8 மாத சினையாக இருந்தது.

    பசுமாட்டை கடந்த 1-ந் தேதி குமாரசாமி கோட்டையூர் ஏரியில் மேய்ச்சலுக்காக கட்டி வைத்துவிட்டு அணைக்கட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். பின்னர் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது அங்கிருந்த பள்ளத்தில் பசுமாடு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து குமாரசாமி அணைக்கட்டு போலீசில், பனந்தோப்பு பட்டியைச் சேர்ந்த பக்கத்து நிலத்துகாரின் பசு மாடு முட்டியதில் தனது பசுமாடு இறந்ததாகவும், அதற்கு நஷ்ட ஈடு பெற்று தர வேண்டும் எனவும் புகார் கொடுத்தார்.

    போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், நிவாரணம் கிடைக்கும் வரை இறந்த பசுமாட்டை அப்புறப்படுத்த உரிமையாளர் மறுப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

    6 நாட்கள் ஆகியும் இறந்துபோன பசுமாட்டை அப்பு றப்ப டுத்தாமல் ஏரியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேட்டை ஏற்ப டுத்துகிறது. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் துர்நாற்றம் தாங்கமுடியாமல் மூக்கை பிடித்த படியே கடந்து செல்கின்றனர்.

    பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, இறந்து போன மாட்டை அந்த பகுதியில் இருந்து அப்பு றப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×