என் மலர்
உள்ளூர் செய்திகள்

அமிர்தி பூங்காவில் பார்வையாளர் நுழைவு கட்டணம் உயர்வு
- மாவட்ட வன அலுவலர் தகவல்
- அழகான நீர்வீழ்ச்சி உள்ளது
வேலூர்:
வேலூரிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமிர்தி வன உயிரின பூங்கா உள்ளது. ஜவ்வாது மலைத் தொடரில் சிறிய விலங்குகள் சரணாலயமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பூங்காவில் மான்கள், கீரிப்பிள்ளைகள், குள்ளநரி, குரங்குகள், சிவப்புத் தலை கிளிகள், காதல் பறவைகள், ஆமைகள், மயில்கள், முதலைகள், காட்டுப் பூனைகள், கழுகுகள், வாத்துகள், புறாக்கள், காட்டுக் கிளிகள், முயல்கள், மலைப் பாம்புகள் உள்ளன.
அடர்ந்து வளர்ந்த மரங்களில் பூத்துக்குலுங்கும் பூக்களை ரசிக்கலாம். அழகான நீர்வீழ்ச்சியும் உள்ளது.
மழைக்கா லங்களில் மட்டுமே நீர் ஆர்ப்பரித்துக் கொட்டும். மலை யேற்றத்திலிருந்து, நீர்வீழ்ச்சியைக் காணலாம். நீர்வீழ்ச்சியில் குளிக்க தற்போது போது அனுமதியில்லை. புதை மணல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை மட்டும், அமிர்தி பூங்காவுக்கு விடுமுறை. அன்று ஒரு நாள், உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்படு கின்றன.
ஞாயிறு உட்பட மற்ற அனைத்து நாட்களும், பூங்காவில் பொழுதைக் கழிக்கலாம்.
இந்த பூங்காவில் பெரியவர்களுக்கு ரூ.10, சிறுவர்களுக்கு ரூ.5, பைக்குகளுக்கு ரூ.25, கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.50 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அமிர்தி சிறுவன உயிரின பூங்காவில் நுழைவு கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவசமும், சிறியவர்களுக்கு ரூ.10, பெரியவர்களுக்கு ரூ.50, தங்கும் அறைக்கு பெரியோர்களுக்கு ரூ.250 குழந்தைகளுக்கு ரூ.100 என கட்டணம் உயர்த்தப்ப ட்டுள்ளது.
மேலும் இந்த கட்டண முறை இன்று முதல் அமலுக்கு வந்ததாக மாவட்ட வன அலுவலர் கலாநிதி தெரிவித்தார்.






