என் மலர்
உள்ளூர் செய்திகள்

நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி. சம்பத் பேட்டி அளித்த காட்சி.
கடந்த 18 மாதத்தில் நறுவீ மருத்துவமனையில் 2.20 லட்சம் பேர் சிகிச்சை பெற்று சாதனை
- மருத்துவமனை தலைவர் ஜி.வி.சம்பத் தகவல்
- பல்வேறு விதமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது
வேலூர்:
வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி. சம்பத் கூறியதாவது:-
வேலூர் நறுவீ மருத்துவமனையில் கடந்த 18 மாதங்களில் உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் என 2,20 லட்சத்திற்கும் மேற்ப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து சாதனை படைத்துள்ளது.
இந்த கால கட்டத்தில் இம்மருத்துவமனையில் வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளுக்கு இருதய சிகிச்சை, நுரையீரல், மகப்பேறு மருத்துவம், சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, குடல் நோய் சிகிச்சை, மூட்டு வலி மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு விதமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குண மடைந்துள்ளனர்.
இதில் உலகை அச்சுறுத்திய ஆட்கொல்லி நோயான கொரோனாவிற்கு இம்மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டு இந்த நோயால் பாதிக்கப்பட்ட 3,543 நோயாளிகளுக்கு நவீன சிகிச்சை அளித்து நோயாளிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
நறுவீ மருத்துவமனைக்கு மகப்பேறு சிகிச்சைக்காக வந்த 602 கர்பிணி பெண்களுக்கு நல்ல முறையில் பிரசவம் பார்க்கப்பட்டு குழந்தைபேறு அடைந்துள்ளனர். இருதய நோயால் பாதிக்கப்பட்ட 1,113 நோயாளிகளுக்கு அறுவை சிசிச்சை மற்றும் ஆன்ஜியோ உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
விபத்து மற்றும் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்ட 4,735 நோயாளிகளுக்கு இம்மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் காக்கப்பட்டனர். சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட 2,716 நோயாளிகளுக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டிருக்கிறது.
இதில் மருத்துவமனை, செயல் இயக்குநர் டாக்டர் பால் ஹென்றி, மருத்துவ சேவைகள் தலைவர் டாக்டர் அரவிந்தன் நாயர், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ், இயக்குநர் டாக்டர் திலிப் மத்தாய், தலைமை இயக்குதல் அலுவலர் மணிமான் ஆகியோர் உடன் இருந்தனர்.






