என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்களுக்கு ரூ.1000 வழங்க வீடு வீடாக டோக்கன் வினியோகம்
    X

    வேலூர் ஆர்.என்.பாளையத்தில் மகளிர் உரிமை தொகைக்காண விண்ணப்பம் வீடு வீடாக வழங்கிய காட்சி.

    பெண்களுக்கு ரூ.1000 வழங்க வீடு வீடாக டோக்கன் வினியோகம்

    • செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது
    • பணியில் ரேசன் கடை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    வேலூர்:

    குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இதையடுத்து இன்று முதல் ரேசன் கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக விண்ணப்ப படிவம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி வேலூர் மாவட்டத்திற்கு 4,58,473 விண்ணப்ப படிவங்கள் 70 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    வேலூர் மாவட்டத்தில் உள்ள 699 ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைகள் உள்ள பயனாளிகள் அனைவருக்கும் வீடு வீடாக விண்ணப்ப படிவங்கள், டோக்கன் வழங்கும் பணியில் ரேசன் கடை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதே போல் திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் இன்று வீடு வீடாக டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் வழங்கினர்.

    Next Story
    ×