search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூரில் 200 பேருக்கு சமுதாய வளைகாப்பு
    X

    கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு செய்யப்பட்டு சீர்வரிசை பொருட்கள்  கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வழங்கிய காட்சி.

    வேலூரில் 200 பேருக்கு சமுதாய வளைகாப்பு

    • கர்ப்பிணிகள் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்
    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அறிவுரை

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சா ரியில் உள்ள தனியார் அரங்கத்தில் இன்று ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து வார விழா மற்றும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது‌. இதில் 200 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு செய்யப்பட்டு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். கார்த்திகேயன் எம் எல் ஏ, துணை மேயர் சுனில் குமார், 2-வது மண்டல குழு தலைவர் நரேந்திரன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கோமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது

    கர்ப்பிணிகளுக்கும் குழந்தைகளுக்கும் நாம் அரணாக இருக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்தும் வகையில் இது போன்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிகள் நமது முன்னோர்களால் நடத்தப்பட்டு தொடர்ந்து நடந்து வருகிறது.

    தமிழக முதல்அமைச்சர் மு க ஸ்டாலின் பெண்களுக்கு எந்தெந்த சலுகைகள் வழங்க வேண்டும் என யோசித்து எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    பெண்களுக்கு இலவச பஸ் பயணம் கொண்டு வந்தார். அதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். கர்ப்பிணிகளுக்காக சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டு வருகிறது.

    கர்ப்பிணி தாய்மார்கள் நல்ல சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் உங்களுடைய ஆரோக்கியத்தை வளர்த்து நல்ல முறையில் குழந்தைகளை வளர்க்க வேண்டும்.

    சரியான உணவு விகிதத்தை கடைபிடித்து உங்களுக்கு சிவப்பு அணுக்கள் அதிகரிக்க கூடிய மாதுளை மற்றும் பழ வகைகள் நாட்டு காய்கறிகள் தானிய வகைகளை சாப்பிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×