search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏரி தூர் வாரும் பணியை கலெக்டர் ஆய்வு
    X

    ஏரி தூர் வாரும் பணியை கலெக்டர் ஆய்வு செய்த காட்சி.

    ஏரி தூர் வாரும் பணியை கலெக்டர் ஆய்வு

    • சீமை கருவேல மரங்களை அகற்றினர்
    • கரைகளை பலப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட, நெல்வாய் ஊராட்சியில் உள்ள ஏரி சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

    இந்த ஏரியில் சீமைக் கருவேலமரங்கள் அதிக அளவில் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. மழைக்காலங்களில் ஏரியில் தேங்கும் தண்ணீரை ஏரியில் உள்ள சீமை கருவேல மரங்கள் உறிஞ்சு விடுகிறது.

    இதனால் ஏரி நிரம்பிய சில மாதங்களிலேயே தண்ணீர் வற்றிபோகிறது. எனவே சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் வேலூர் எக்ஸோனாரா இன்ட ர்னேஷனல் தொண்டு நிறுவனம் தானாக முன்வந்து, நெல்வாய் ஏரியில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி ஏரியை தூர்வார அனுமதி கேட்டு கடிதம் வழங்கினர். அதன்படி தொண்டு நிறுவனத்துக்கு ஏரியில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற அனுமதி வழங்கினார்.

    அதன்படி ஏரியில் உள்ள சீமை கருவள மரங்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இதனை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கருவேல மரங்கள் முழுவதாக அகற்றி, ஏரியை தூர்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    ஆய்வின்போது கணியம்பாடி ஒன்றியகுழு தலைவர் திவ்யாக மல்பிரசாத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன்பாபு, கவுரி, தாசில்தார் செந்தில், உடன் இருந்தனர்.

    Next Story
    ×