என் மலர்
உள்ளூர் செய்திகள்

தனியாக செல்லும் பெண்களை குறி வைத்து செயின் பறிப்பு
- 3 பேர் கும்பல் அட்டகாசம்
- கைது செய்ய பொது மக்கள் வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் மாநகர பகுதியில் செல்போன் செயின் பறிப்பு போன்ற வற்றில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.சாய்நாதபுரம் வள்ளலார் நகர் பகுதியில் பூங்கா ஒன்று உள்ளது.
இதன் அருகே கடந்த வாரம் நடந்து சென்ற பெண்ணை மிரட்டி 3 பேர் கும்பல் செயின் பறித்தனர். அவரிடம் இருந்து செல்போனையும் பறித்து கொண்டு பைக்கில் சென்று விட்டனர்.
நேற்று முன்தினம் இதே பகுதியில் தனியாக நடந்து வந்த பெண்ணிடம் பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் செயின் பறித்து சென்று விட்டார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. தனியாக நடந்து வரும் பெண்களை குறி வைத்து செயின் பறிப்பு செல்போன்கள் திருட்டு நடப்பதாக அந்த பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது போன்ற சம்பவங்களை தடுக்க அந்த பகுதியில் போலீசார் கூடுதல் வந்து செல்ல வேண்டும் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதேபோல ஆற்காடு ரோட்டில் காகிதப்பட்டறை தியேட்டர் அருகில் கும்பல் ஒன்று செல்போன் பறிப்பில் ஈடுபடுவதாக அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்து ள்ளனர்.
செயின், செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வரும் கும்பல்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.






