என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சவ ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தசம்பவத்தால் மற்றொரு வாலிபரும் சாவு
    X

    சவ ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தசம்பவத்தால் மற்றொரு வாலிபரும் சாவு

    • சிகிச்சை பலனின்றி பரிதாபம்
    • மனைவி 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ்காரர் பலராமன் என்பவருடைய மனைவி ராஜாமணி இவர் கடந்த மாதம் 26-ந் தேதி இறந்து விட்டார்.

    சவ ஊர்வலத்தின் போது உடன் வந்தவர்கள் பட்டாசுகளை ெவடித்துள்ளனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு வெடித்து சிதறி உள்ளது. அதன் தீப்பொறி வாகனத்தில் விழுந்து அதிலிருந்த பட்டாசுகளை வெடித்து சிதறின.

    அப்போது அந்த வண்டியில் இருந்த கள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் (வயது 32) கே.வி.குப்பம் அடுத்த கீழ்ஆலத்தூர் நாகல் கிராமத்தைச் சேர்ந்த டில்லிபாபு (27) ஆகிய இருவர் மீதும் பட்டாசு விழுந்து வெடித்ததில் பலத்த காயம் அடைந்தனர்.

    இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பிரபாகரன் சிகிச்சை பலனின்றி கடந்த 1-ந் தேதி பரிதாபமாக இறந்தார்.

    மேலும் அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த டில்லி பாபு நேற்று காலையில் பரிதாபமாக இறந்தார். சவ ஊர்வலத்தில் பட்டாசு வீசிய சம்பவத்தில் காயமடைந்த இருவரும் இறந்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இறந்து போன டில்லிபாபுக்கு ரம்யா என்ற மனைவியும் 2 பெண் குழந்தையும் உள்ளது தற்போது ரம்யா 8 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×